புத்தாண்டு ஸ்பெஷல்.. தமிழில் கால் பதித்த ஆஹா ஓடிடி.. தொடக்க விழாவில் யார் பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஆஹா, சென்னையில் தமிழ் தளத்தை துவங்கியுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆஹா தமிழ் தளத்தை துவங்கி வைத்தார்.
 
மேலும், ஆஹா தமிழ் தளத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

Advertising
>
Advertising

இந்நிகழ்வில்  பிராண்ட் அம்பாசிட்டர்கள் நடித்த “தட்டினா தமிழ் மட்டுமே” என்ற விளம்பர படமும் வெளியிடப்பட்டது.

ஆஹா தமிழ் தளத்தின் துவக்க விழாவில், தமிழ் சினிமாவின் நாயகர்கள் S.P.முத்துராமன், பாரதிராஜா, தெய்வத்திரு AV மெய்யப்பன், தெய்வத்திரு கே பாலசந்தர், தெய்வத்திரு M.S.விஸ்வநாதன் அவர்கள்,தெய்வத்திரு SP பாலசுப்ரமணியம், மற்றும் தெய்வத்திருமதி ஶ்ரீதேவி ஆகியோருக்கு, அவர்களது தமிழ்சினிமா அர்பணிப்பை கௌரவிக்கும் வகையில் “கலைஞர் பெருமை” என்ற விருதை தமிழக முதல்வர் மற்றும் ஆஹா முதன்மை நிர்வாகிகள் வழங்கி கௌரவித்தனர்.

தமிழ் சினிமாவின் முக்கியமான நபர்கள், இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் மற்றும்  தயாரிப்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர். தமிழ் வெளியீடு பற்றி, பிரோமோட்டர், ஆஹா நிறுவனம் திரு, ராம் ஜுபால்லி கூறியதாவது, "மாறுபட்ட மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளகூடிய உள்ளடக்கங்கள் வழங்குவதற்காக ஆஹா தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று (14.04.2022), நமது தமிழ் உள்ளடக்க பட்டியலை வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சி. ஒருவரது சொந்த மொழியில் கதைகளை கேட்டு, கொண்டாடுவது மகிழ்ச்சிகரமான ஒன்றாகும்.

சிலம்பரசன் மற்றும் அனிருத் எங்களது பிராண்ட் அம்பாசிட்டர் மட்டும் அல்ல, எங்களது பிராண்ட் பாட்னர்களும் அவர்கள் தான். எங்களுடன் அவர்கள் இணைந்திருப்பது பொது மக்களிடையே ஒரு இலகுவான அறிமுகத்தை எங்களுக்கு தரும் மற்றும் பார்வையாளர்களின் மரியாதையையும் பெறவும் உதவும். தெலுங்கில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, ஆஹா தமிழிலும் தரமான உள்ளடக்கங்களை பல வகைகளில், அனைத்து வயது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளது. எங்கள் தமிழ் உள்ளடக்கங்களில் பெரும்பாலானவை ஒரிஜினல் படைப்புகள் மற்றும் எங்கள் நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய படைப்பாளர்களுடன், இந்த தளம் கைகோர்த்து செயல்படவுள்ளது, விவேகமானது என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

தமிழ் வெளியீட்டின் அறிவிப்பை பற்றி, பிரோமோட்டர், ஆஹா நிறுவனம் திரு. அல்லு அரவிந்த் கூறுகையில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளிகளைக் கொண்டு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட எங்கள் தமிழ உள்ளடக்கத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அடுத்ததாக வெளியீட்டிற்கு தயாராக உள்ள எங்களது தமிழ் உள்ளடக்கங்கள், இயக்குனர் வெற்றிமாறன் உடைய பேட்டைக்காளியுடன், பிரியாமணி நடித்துள்ள பாமா கலாபம், அம்முச்சி 2, ரமணி vs ரமணி 3 என மிகப்பெரிய வரிசை உள்ளது. தியேட்டரில் வெளியான ஜீவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் நடித்துள்ள செல்ஃபி, கார்த்தி நடித்துள்ள சர்தார், வெங்கட் பிரபுவின் மன்மதலீலை என பெரிய திரைப்படங்களும் வரிசையில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ஆஹா நிறுவனத்தின் சி.இ.ஒ திரு, அஜித் தாகூர் பேசுகையில், "இந்தியாவிலிருந்தும், உலகம் முழுவதும் பரவியுள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களிடமிருந்தும் ஆஹாவுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் அன்பினால் நாங்கள் உற்சாகத்தில் உள்ளோம். எங்கள் பயனர்கள் ரசிக்கும் வகையிலான கதைகளை தொடர்ந்து வழங்குவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஆஹா தொடங்கியதிலிருந்து, நாங்கள் எங்கள் பயனர்களை ஆழ்ந்து கேட்டு, அவர்கள் பார்க்க விரும்பும் கதைகளை கவனமாக வடிவமைத்தோம். ஆஹா இப்போது அதன் பயணத்தைத் தொடங்கிவிட்டது, ஆனால் விரைவில் உலகளவில் தமிழ் மொழிக்கான பொழுதுபோக்கு தளமாக நாங்கள் இருப்போம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என கூறினார்.

2020-ல் தெலுங்கில் துவங்கிய ஆஹா பயணம், ஒரு மில்லியன் சந்தாதாரர்களை ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே பெற்று, அதன் அற்புதமான பயணத்தை துவங்கியது. ஆஹா தமிழுக்கான ஆண்டு சந்தா பார்வையாளர்களுக்கு மலிவு விலையான ரூ.365க்கு கிடைக்கிறது, அதாவது ஒரு நாளைக்கு 1 ரூபாயாக இருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Aha tamil launches in tamil new year cm stalin inaugurates

People looking for online information on Aha OTT, Aha Tamil, Anirudh Ravichander, MK Stalin, Silambarasan TR, Udhayanidhi Stalin will find this news story useful.