வித்தியாசமான விஜய் ஆண்டனி.. பவர்ஃபுல்லான ரோலில் அருண் விஜய்.. அசத்தலான "அக்னி சிறகுகள்" டீசர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

‘மூடர் கூடம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் நவீன் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். டபுள் ஹீரோ கதையம்சம் கொண்ட இப்படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

முக்கிய வேடங்களில்  அக்ஷரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.

இந்த படம் 2019 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தின் ஷூட்டிங்  பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் டீசர் இன்று (27.05.2022) ரிலீஸ் ஆகி உள்ளது. டீசரை நடிகர் சூர்யா டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அருண் விஜய் குரலில் டீசர் தொடங்குகிறது. இரண்டு மைய கதாபாத்திரங்களுக்கு இடையேயான மோதலாக டீசர் அமைந்துள்ளது.

ரஞ்சித் எனும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க, சீனு எனும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டணியும், விஜி கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்துள்ளனர். டாக்ஸி தல எனும் கதாபாத்திரத்தில் சென்றாயன் நடித்துள்ளார்.

வித்தியாசமான விஜய் ஆண்டனி.. பவர்ஃபுல்லான ரோலில் அருண் விஜய்.. அசத்தலான "அக்னி சிறகுகள்" டீசர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Agni Siragugal Official Teaser Vijay Antony Arun Vijay Akshara

People looking for online information on Agni Siragugal, Akshara Haasan, Arun Vijay, Vijay Anthony will find this news story useful.