பட்டைய கிளப்பும் 'GOLD' படத்தின் வீடியோ பாடல்.. ஏஜன்ட் டீனாவின் அசத்தல் என்ட்ரி! வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோல்டு படத்தின் புதிய வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.

அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து 7 வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்டு படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தில் ஹீரோவாக பிரித்விராஜ் நடித்துள்ளார். பிரித்விராஜூடன்  நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோருடன் படத்தில் நடித்த 40க்கும்  மேற்பட்ட நடிகர், நடிகைகளும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்துள்ளனர்.

கோல்ட் படம் நாளை டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள் & டீஸரை தவிர வேறு எந்த முன்னோட்டமும் வெளியாகவில்லை. இதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் வீடியோ பாடல் மேல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு திரும்பியது. இந்நிலையில் இந்த படத்தின் தானே தானே பாடல் வெளியாகி உள்ளது. பிருத்விராஜ் நடனத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது. விக்ரம் படத்தின் மூலம் பிரபலமான ஏஜன்ட் டீனா நடன கலைஞர் வசந்தி இந்த பாடலில் தோன்றி ஆடியுள்ளார். மேலும் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். தினேஷ் குமார் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். சபரீஷ் வர்மா இந்த பாடலை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை வலிமை படத்தின் கோயம்புத்தூர் ஏரியா வினியோகஸ்தரான SSI புரொடக்ஷன்ஸ் சுப்பையா கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மாநாடு படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Agent Tina Vasanthi Cameo in Gold Thanne Thanne Video Song

People looking for online information on Agent Tina, Alphonse Puthren, Gold, Thanne Thanne Video Song will find this news story useful.