விஜய் டிவி, 06, பிப்ரவரி 2022:- டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது.

போட்டியாளர்கள்
இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் முதல் வாரம் நடந்த செலிபிரிட்டி பிரஸ் மீட் டாஸ்க், நாமினேஷன், பிக்பாஸின் கேள்விகள் என அனைத்தும் பிப்ரவரி 6-ஆம் தேதி விஜய் டிவியில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஒளிபரப்பானது.
வனிதாவிடம் அனிதா கேள்வி..
இந்த நிகழ்ச்சியில், முந்தைய சீசன் போட்டியாளரான வனிதா விஜயகுமாரிடம், அனிதா கேள்வி கேட்டிருந்தார். அதன்படி, “நீங்கள் ஏன் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தீர்கள்?” என்கிற அனிதாவின் கேள்விக்கு பதில் சொன்ன வனிதா விஜயகுமார், பல்வேறு விஷயங்களை பெர்சனலாக மனம் திறந்து பேசியுள்ளார்.
40 வயசு.. புருஷன் இல்ல.. 2 முறை Divorce ஆயிடுச்சு
அதில், வனிதா, “வனிதா விஜயகுமார் என்கிற பெயர் மூலமாக மட்டும் நான் இங்கு வந்துவிடவில்லை. உங்களைப் போலவே நானும் வந்திருக்கிறேன். ஒரு 15 வருட என் வாழ்க்கை போராட்டம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அடியோடு மாறியது. நான் எடுத்த சரியான முடிவாக இதைக் கருதுகிறேன். இப்போது சரியான திசையை நோக்கி பயணம் செய்ய முடிகிறது. இந்த மூன்று வருடம் எனக்கு முக்கியமான வருடம். 40 வயது நெருங்குகிறது கணவர் இல்லை, 2 முறை விவகாரத்து நடந்துவிட்டது. என்னை மாதிரி ஒரு பெண் ஜெயித்தால், அது அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என நினைக்கிறேன்!” என்று கூறினார்.
இந்த விஷயம் இல்லனா 2nd Time வந்திருக்கவே மாட்டேன்
மேலும் பேசிய வனிதா, “பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மணிநேர சீசனில் பங்கேற்கும் போது மற்ற நேரங்களில் நடந்ததை காண்பிக்க மாட்டார்கள். இங்கு 24 மணி நேரமும் நடந்ததை காண்பிப்பார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இல்லையென்றால் நிச்சயமாக வந்திருக்க மாட்டேன். கடந்த முறை எனக்கு காப்பி கொடுக்கவில்லை, இந்த முறை அந்த காப்பியை வாங்குவதற்காக நான் வந்தேன். நீங்கள் ட்ராபியை வாங்குவதற்காக வந்த மாதிரி..” என்று கலகலப்பாக பேசினார்.
Bigg Boss OTT
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது. அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: "எதுனாலும் பிளான் பண்ணி பண்ணனும்" - ஆடியோவாக Leak ஆன சுரேஷ் தாத்தாவின் தரமான பிளான்!