“மீண்டும் VIJAY-ஐ வைத்து படம் எடுக்கும் SAC..?” - அவரோட பதில் இதுதான்.. EXCLUSIVE பேட்டி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என்கிற அடையாளத்துடன் வலம் வரும் முன்னணி ஹீரோ.  இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குநராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர்.

Advertising
>
Advertising

Also Read | விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.. வைரலாகும் போட்டோஸ்..!

விஜய்க்கு முன்பும் பின்பும் பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது மனைவி ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் மணவாழ்க்கை, திரை வாழ்க்கை பல விஷயங்களை பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியில் பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவியும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் ஆகியோரிடம் விஜே அர்ச்சனா நிறைய சுவாரஸ்யமான கேள்விகளை கேட்க, அவர்களும் தங்களது நினைவலைகளை பகிர்ந்துகொண்டனர்.

இதில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஊடக செய்திகள் குறித்த ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அதன்படி ஊடகங்களில் மீண்டும் விஜய்யை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் திரைப்படம் எடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்த உண்மை தன்மையை அவரிடமே கேட்கிறார் அர்ச்சனா. இதற்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், “விஜய்யை வைத்து படம் எடுக்கிறேன் என்று தானே சொல்லி இருக்கிறார்கள்.. படம் இயக்குகிறேன் என்று சொல்லவில்லையே..? இது நடக்கும் போது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். நிச்சயமாக அது நடக்கும். ஒரு தயாரிப்பாளராக நான் அதில் இருப்பேன்!” என்று பதில் அளித்து இருக்கிறார்.

இதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு கேஸ்டராகவும் அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிப்பது குறித்த ஒரு மீம் வைரலாகி வந்தது. இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், “நான் நடித்தால் ஹீரோவாக நடிப்பேன். கேங்ஸ்டராக எல்லாம் நடிக்க மாட்டேன். அப்படியே நடித்தாலும் விஜய் சேதுபதி எனக்கு மிகவும் பிடித்த நடிகர், அவர் எனக்கு வில்லனாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, எஸ்.ஏ.சந்திரசேகர் இட்லி மிகவும் விரும்பி சாப்பிடுவார் என்றும், டைமண்டை கூட விட்டுக் கொடுத்து விடுவார், ஆனால் இட்லியை விட்டுக் கொடுக்க மாட்டார், அவர் அத்தனை இட்லி பிரியர் என்றும் ஷோபா சந்திரசேகர் குறிப்பிட்டார். இவர்கள் பேசிய சுவாரசிய விஷயங்களை இணைப்பில் இருக்கும் முழுமையான பேட்டியில் காணலாம்.

Also Read | "இளையராஜா பாட்ட கேட்டு கண்ணீர் விட்டு அழுதுட்டேன்!" - பா.ரஞ்சித் Emotional பேச்சு.!

“மீண்டும் VIJAY-ஐ வைத்து படம் எடுக்கும் SAC..?” - அவரோட பதில் இதுதான்.. EXCLUSIVE பேட்டி. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Again SAC doing Vijay film, here is his Answers Exclusive

People looking for online information on SA Chandrashekhar, Shoba Chandrashekhar, Vijay, Vijay Sethupathi will find this news story useful.