BREAKING: இயக்குனர் வெற்றிமாறனுடன் நடிகை ஆண்ட்ரியா இணையும் புதிய படத்தின் LATEST UPDATE!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வடசென்னை படத்துக்கு பிறகு நடிகை ஆண்ட்ரியா மீண்டும் வெற்றிமாறனுடன் இணைய உள்ளார்.

தற்போது நடிகை ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு -2 படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை இயக்குனர் வெற்றிமாறன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். 

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது லாரன்ஸ் நடிப்பில் அதிகாரம் படத்தை தயாரித்து வருகிறார், மேலும் சூரி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் திண்டுக்கலில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா பிசாசு-2 படத்துக்கு பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஆனந்த் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ஹீரோயின் சப்ஜெக்டாக உருவாகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் 16 நாட்களுக்கான படபிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தொடர்புடைய இணைப்புகள்

After vadachennai vetrimaaran and andrea jermiah

People looking for online information on Andrea Jermiah, Vada chennai, Vetrimaaran will find this news story useful.