தந்தி டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், செய்திகளை வழங்குபவராகவும் தனது வாதத் திறமையால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் ரங்கராஜ் பாண்டே. அவர் பங்கேற்கும் டிவி நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
அதனைத் தொடர்ந்து தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் நடிகராகவும் தடம் பதித்தார். வக்கீலாக அந்த படத்தில் ரங்கராஜ் பாண்டே அவருக்கு மிகவும் சரியாக பொருந்தியது. இவர் அடுத்து நடிக்கும் படம் குறித்து எதிர்பார்க்கப்பட்டநிலையில் அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், 'க/பெ ரணசிங்கம்' படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பாராட்டிக் கூறி, அதனை தான் நேரில் பார்த்ததாக தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், ''உங்கள் வேடம் ரசிகர் மத்தியில் பேசப்படக் கூடியதாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள 'க/பெ. ரணசிங்கம்' படத்தை விருமாண்டி எழுதி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.