சொகுசு கார் விவகாரத்தில் நடிகர் விஜய் வரி விலக்குக் கோரியிருந்த நிலையில், அதற்காக 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது சென்னை நீதிமன்றம்.
இதனை அடுத்து விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அரசியல் பிரமுகர் கார்த்திக் சிதம்பரம், “இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை, அவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் சீமான், “அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து நில்! இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை! தொடர்ந்து செல்! ‘ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு’ என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி!” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த போது சூர்யாவுக்கு எதிர்ப்புகள் வந்தது.
அந்த சமயத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்த சீமான், “தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும்!” என குறிப்பிட்டிருந்தார்.
ALSO READ: ‘ரசிகையின் திடீர் மறைவு’.. கண்களில் கண்ணீருடன் நடிகர் ஆரியின் உருக்கமான பதிவு!