மீண்டும் ஹீரோவாக 'மக்கள் நாயகன் ராமராஜன்'.. அதுவும் PAN INDIA படத்துல! மாஸ் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராமராஜன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.

Advertising
>
Advertising

மக்கள் நாயகன் என தமிழ் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். ராமராஜன் 1977 ஆம் ஆண்டு தொடங்கி சிறிய வேடங்களில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். மண்ணுக்கேத்த பொண்ணு (1985) மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1986 இல் வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தில் கதாநாயகனாக தனது அறிமுகம் ஆனார். கிராமம் சார்ந்த  திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவரது கரகாட்டகாரன் (1989) திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது. திரையரங்குகளில் 400 நாட்கள் ஓடியது.  கரகாட்டக்காரன் படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களில் மிகவும் முக்கியமான படமாகும்., மேலும் பல படங்களும் ராமராஜன் நடிப்பில்  நூறு நாட்கள் ஓடி  வசூலில் சாதனை புரிந்தவை‌.

அரசியலிலும் ஈடுபாடு கொண்ட ராமராஜன், 1998 ஆம் ஆண்டு திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 12வது மக்களவைக்குத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராமராஜன், 2001 ஆம் ஆண்டு சீறி வரும் காளை படத்திற்கு பிறகு 2012 ஆம் ஆண்டு மேதை படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஹீரோவாக ராமராஜன் நடிக்க உள்ளார்.

ராமராஜன் நடிப்பில் 45வது படமாக இந்த படம் உருவாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாமானியன் என இந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ராமராஜன் உடன் எம்.எஸ். பாஸ்கர், ராதா ரவி ஆகியோர் நடிக்கின்றனர். ராகேஷ் இப்படத்தினை இயக்க உள்ளார். மதியழகன் இப்படத்தினை தயாரிக்கின்றார். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.

Tags : Ramarajan

After so long time ramarajan is back as Pan India Hero

People looking for online information on Ramarajan will find this news story useful.