HOUSEMATES-ஐ சந்தித்ததும் EMOTIONAL-ஆன யாஷிகா.. ராஜூவுக்கும் நிரூப்புக்கும் கொடுத்த ஸ்பெஷல் TIPS! #BIGGBOSTAMILS5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் சொந்தக் காரர்கள் பலரும் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

Advertising
>
Advertising

இதனிடையே நிரூப் நந்தகுமாரின் தந்தை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். இதேபோல் நிரூப்பின் முன்னாள் காதலியான நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தார். அப்போது யாஷிகா ஆனந்த் கண்ணாடி பெட்டகத்துக்குள் இருந்தபடி ஹவுஸ்மேட்ஸிடையே பேசினார்.

அப்போது கண்ணாடிப் பெட்டகத்துக்குள் இருந்தபடி யாஷிகாவும், வெளியில் இருந்தபடி நிரூப்பும் கண்ணாடிக்கு நேராக தத்தம் கைகளை வைத்துக்கொண்டனர்.  ஹவுஸ்மேட்ஸை இந்த காட்சி உருக வைத்தது. நடிகை யாஷிகா ஆனந்த், பல மாதங்களுக்கு முன்பு, ஈ.சி.ஆர் சாலையில் காரில் சென்றபோது நள்ளிரவில், டிவைடரில் மோதி, ஏற்பட்ட விபத்து காரணமாக கார் கோர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து சம்பவத்துல் தமது தோழியை இழந்த யாஷிகா ஆனந்த், பல்வேறு சூழல்களிலும் தமது தோழியை பறிகொடுத்த வருத்தத்தையும் ஆற்றாமையையும் அழுதபடி பகிர்ந்தும் பதிவு செய்தும் வருகிறார். இப்படி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவுமான பிரச்சனைகளை மெல்ல, மெல்ல கடந்த நடிகை யாஷிகா ஆனந்த் உடல்நலம் பெற, சில காலம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார்.

பின்பு குணமாகி வந்த பின்னரும் கூட, பிஹைண்ட்வுட்ஸ் ஊடக குழுமத்துடன், விபத்து நடந்த ஈ.சி.ஆர். சாலைக்கு சென்ற நடிகை யாஷிகா ஆனந்த், விபத்தின் போது தம்மையும் தம் நண்பர்களையும் காப்பாற்ற முயற்சித்தவர்களுக்கு நன்றி கூறினார். மேலும், விபத்து நடந்தது எப்படி என்கிற அவர்களின் பார்வையையும் தெரிந்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த யாஷிகா ஆனந்த், கண்ணாடி பெட்டகத்தில் இருந்தபடி, அனைவருக்கும் வணக்கம் சொல்லியும் வாழ்த்து சொல்லியும் பேசியதுடன், “நீ நன்றாக பண்ணுகிறாய். அப்படியே பண்ணு” என்று நிரூப்பை பார்த்து கூறினார். ராஜூவை பார்த்து, “ராஜூ ஃபர்ஸ்ட் நீங்க இருந்த மாதிரி இருங்க!” என்றும், மற்ற ஹவுஸ்மேட்ஸிடையே, “எல்லாரும் சந்தோஷமா இருங்கள்” என்றும் கூறினார்.

தொடர்புடைய இணைப்புகள்

After recover from car accident Yashika Anand enters biggboss

People looking for online information on Yashika Aannand, Yashika anand, Yashika enters biggbosstamil5 will find this news story useful.