இருமுகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் 'எனிமி' படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இரண்டாவது முறையாக சேர்ந்து நடிக்கின்றனர்.
'எனிமி' ஆர்யாவின் 32-வது படம் ஆகும், விஷாலுக்கு 30-வது படம். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் ஆனந்த் சங்கர் ஏற்கனவே, விக்ரம் பிரபு நடிப்பில் ‘அரிமா நம்பி’, விக்ரம் நடிப்பில் ‘இருமுகன்’, விஜய் தேவாரகொண்டா நடிப்பில் ‘நோட்டா’ படங்களை இயக்கியிருந்தார்.
செப்டெம்பரில் இந்த படம் திரைக்கு வரும் என தயாரிப்பு தரப்பு முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பின் அக்டோபர் ஆயுத பூஜைக்கு வருமென அறிவித்தது. இந்நிலையில் இந்த படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போகி உள்ளது. இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் சிம்புவின் மாநாடு, ரஜினியின் அண்ணாத்த படங்களுடன் தீபாவளிக்கு மோத உள்ளது.
'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக தமனும், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகரும், கலை இயக்குநராக டி.ராமலிங்கமும் பணிபுரிந்து வருகிறார்கள். இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. டீசருக்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து படத்தின் சிங்கிள் பாடல்களை படக்குழு வெளியிட்டது அதற்கும் நல்ல வரவேற்பு நிலவி வருகிறது.