நடிகை ராகிணி திவேதியைத் தொடர்ந்து நடிகை சஞ்சனா கல்ராணி கைது ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில வாரங்களாக போதை பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் கன்னட திரையுலகினர் சிலரது பெயரைக் குறிப்பிட்டு போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து இந்த விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியது. நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராகினி திவேதியின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடிகை சஞ்சனா கல்ராணி போலீஸார் காவலில் எடுத்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை ராகிணி திவேதியைத் தொடர்ந்து நடிகை சஞ்சனா கல்ராணி கைது ? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

After Ragini Ragini Dwivedi, CCB police raided Popular heroines residence | போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல ஹீரோயின் வீட்டில் போலீஸ் சோதனை

People looking for online information on Ragini Dwivedi, Sanjjana Galrani will find this news story useful.