மும்பை: புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூனின் புதிய படம் வெளியாக உள்ளது.

பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' கடந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
'புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்தது. இறுதியாக 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.
ஹிந்தியில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. சுமார் 90 கோடி ரூபாயை வசூல் செய்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி உள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2019ல் வெளியான ஆல வைகுண்ட புரமுலு படத்தை இந்தியில் டப்பிங் செய்து ஜனவரி 26,2022 அன்று வெளியிட உள்ளனர். இந்த படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது, தமன் இசையில் அனைத்து பாடலும் ஹிட், திரி விக்ரம் இயக்கிய இந்த படம் மொழி கடந்து தென்னிந்தியா முழுவதும் சக்க போடு போட்டது. இந்த அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.