SAMANTHA: AIRPORT-ல் அரபிக் குத்து பாட்டுக்கு செம குத்து DANCE.. வெளுத்து வாங்கிய சமந்தா - BEAST ARABIC KUTHU

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 17, பிப்ரவரி 2022:  நடிகை சமந்தா ஏர்போர்ட்டில் அரபிக் குத்து பாடலுக்கு ஆடிய டான்ஸ் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

நடிகை சமந்தா

பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா தமிழில் நடிக்கத் தொடங்கி, தெலுங்கு முதலான தென்னிந்திய மொழிகளில் முதன்மையான நடிகையாக தற்போது விளங்கி வருகிறார். முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நடிகை சமந்தா சமீப காலமாகவே ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

Also Read: நம்பி நாமினேட் பண்ணிய வனிதா.. கடைசியில் குண்டை தூக்கி போட்ட பாலாஜி.. சில நேரங்களில் சில சம்பவங்கள்..

ஒரு பாடலுக்கு தோன்றிய சமந்தா

இதனிடையே யு-டர்ன், ஓ பேபி உள்ளிட்ட பெண் மைய கதாபாத்திர திரைப்படங்களிலும், நடிகை சமந்தா நடித்துவந்ததை தொடர்ந்து அண்மையில் புஷ்பா திரைப்படத்திற்காக சமந்தா நடனம் ஆடிய பாடல் மிகவும் பிரபலமானது. அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.

ஓ சொல்றியா மாமா

இந்த பாடலில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி அனைவரின் கவனத்தையும் வரவேற்பையும் பெற்று வந்தார். ஓ சொல்றியா மாமா.. ஓஓ ஓஓ சொல்றியா .. என்கிற, கேளிக்கை விடுதியில் பெண் ஒருவர் ஆடும் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட குத்துப் பாடலில் சமந்தா மாறுபட்ட தோற்றத்தில் வந்து அசர வைத்தார்.

பீஸ்ட் முதல் சிங்கிள் பாடல்

இந்த நிலையில் நான் நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் அரபிக் குத்து என்கிற முதல் சிங்கிள் பாடல் வைரலாகி வருகிறது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதி உருவான இந்தப் பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் பரவி வருகிறது.

இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

பீஸ்ட் மோடில் சமந்தா ..

இந்த வீடியோ குறித்து நடிகை சமந்தா தமது இன்ஸ்டாவில் பதிவிடும்போது மற்றுமொரு விமானம் தாமதம் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டு, அந்த நேரத்தில் இந்த டான்ஸை போடுவதாக மறைமுகமாக தெரிவித்திருக்கிறார்.

அதாவது ஏர்போர்ட்டில் நடிகை சமந்தா இந்த குத்து டான்ஸை ஆடி வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

மொத்தத்தில் சமந்தாவும் பீஸ்ட் மோடுக்கு வந்துவிட்டார் என்பதில் ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி!

 

Also Read: அரபிக்குத்து பாட்டுக்கு வைரல் ஆகும் அனிருத் டான்ஸ்... 5 Take ஆனாலும் தெறிக்க விடுறாப்ல.. பரவும் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

After Oo Solreya mama Samantha arabic kuthu viral beast

People looking for online information on Arabic Kuthu, Arabic Kuthu Samantha, சமந்தா அரபிக் குத்து, Samantha, Samantha Arabic Kuthu dance will find this news story useful.