'பசங்க' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். பள்ளிக்குழந்தைகளின் வாழ்வியலை முழுக்க முழுக்க அவர்கள் பார்வையில் பதிவு செய்து முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியது.
தொடர்ந்து படத்துக்கு படம் மாறுபட்ட கதைகள் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் சமீபத்தில் குடும்ப உறவுகளை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டுப்பிள்ளை' படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இதனையடுத்து அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கம் மூலம் தனது பிறந்தநாள் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்த அவர், சர்ப்ரைஸ் அறிவிப்புடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன் என்று அறிவித்துள்ளார். அந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள இசையமைப்பாளர் டி.இமான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.