2வது முறை ஜிவி பிரகாஷூடன் கைகோர்க்கும் ‘லவ் டுடே’ இவானா..! வெளியான MOTION POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளரும் இளம் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கள்வன்’. வித்தியாசமான கதைக்களத்திலான இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷங்கர் இயக்க, இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்து வருகிறார்.

After Naachiyaar GV Prakash Ivana in Kalvan Motion poster
Advertising
>
Advertising

Also Read | Sunny Leone : தன்னுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டபோது உருகி அழுத ரசிகை.! எமோஷனல் ஆன சன்னி லியோன்.!

மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே மற்றும் ஜிவி பிரகாஷின் நடிப்பில் பேச்சிலர் ஆகிய படங்களை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் G.டில்லிபாபு இந்த படத்தை தயாரித்து வருகிறார். காட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக தெரிகிற இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருப்பதாக தகவலகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இப்படத்தில் ஜிவி பிரகாஷ், பாரதிராஜா, இவானா, சாய் தீனா மற்றும் பலர் நடித்துள்ள மோஷன் போஸ்டர் லுக் வெளியாகியுள்ளது. கள்வன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு தெலுங்கில் சொருடு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா, தனுஷுடனான திருச்சிற்றம்பலம் படத்துக்கு பின்னர் இப்படத்தில் நடிக்கிறார். இதேபோல் இப்படத்தின் நாயகி இவானா, கடைசியாக பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படத்தில் நாயகியாக நடித்திருந்தார். முன்னதாக பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த‘நாச்சியார்’ படத்தில் ஜிவி பிரகாஷூடன் இவானா இணைந்து நடித்ததன் மூலம் பிரபலாமாகி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ‘கள்வன்’ திரைப்படம் மூலம் மீண்டும் ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா கைகோர்க்கின்றனர்.

 

Also Read | “இந்த விசயத்துல அசிம் & விக்ரமன் மாதிரி இருந்துருக்கணும்.!”.. மணிகண்டா ராஜேஷ் Exclusive

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

After Naachiyaar GV Prakash Ivana in Kalvan Motion poster

People looking for online information on Axess Film Factory, Bharathiraja, GV Prakash, GV Prakash Kumar, Ivana, Kalvan will find this news story useful.