விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து பிரபல ஹீரோ தனது திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அறிவித்துள்ளார்.
![சல்மான் கான் பட ரிலீஸ் தகவல் | After master this star's big movie to be released in theatres சல்மான் கான் பட ரிலீஸ் தகவல் | After master this star's big movie to be released in theatres](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/after-master-this-stars-big-movie-to-be-released-in-theatres-home-mob-index-1.jpg)
கொரோனா வைரஸ் சூழலால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தியேட்டர்களுக்கு பழையபடி கூட்டம் வருமா என சந்தேகிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ஹிட் அடித்ததுடன், உலக அளவில் கடந்த வார பாக்ஸ் ஆபீஸில் முன்னிலை வகித்து சாதனை படைத்துள்ளது மாஸ்டர்.
இந்நிலையில் நடிகர் சல்மான் கான் தற்போது அவர் நடித்துள்ள ராதே திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அறிவித்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் அவர் நடித்துள்ள ராதே படம் நேரடியாக தியேட்டரில் வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார்.
மே மாதம் வரும் ஈத் பண்டிகையின் போது இத்திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில், இன்னும் பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.