LATEST: மாநாடு தீபாவளி ரிலீஸ் தேதி மாற்றத்தை தொடர்ந்து வெளியான அடுத்த OFFICIAL மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த 2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.

After MAANAADU release DATE change actor gives a official UPDATE!

இயக்குனர் வெங்கட்பிரபு,சிம்புவை வைத்து இந்த 'மாநாடு' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டைம் லூப் பாணியில் இந்தப்படம் உருவாகி உள்ளது. 

After MAANAADU release DATE change actor gives a official UPDATE!

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாள்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் படத்தின் டப்பிங் பணியை படக்குழு துவங்கி உள்ளதாகவும், நடிகர் S J சூர்யா தனது காட்சிகளுக்கான டப்பிங்கை தொடங்கியுள்ளார் என சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்தன. தற்போது படத்தில் நடித்துள்ள நடிகர் பிரேம் ஜி தனது காட்சிகள் சம்பந்தப்பட்ட டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார். 

இந்த படம் வரும் நவம்பர் 25 ஆம் நாள் வெளியாக உள்ளது. நேற்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு  அறிக்கையை வெளியிட்டு மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகாது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

After MAANAADU release DATE change actor gives a official UPDATE!

People looking for online information on Premji, Silambarasan TR, Venkat Prabhu will find this news story useful.