லூசிஃபர் படத்தைத் தொடர்ந்து பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கும் புதிய படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மற்றும் இயக்குநர் பிருத்விராஜ். மோகன்லாலை வைத்து லூசிஃபர் படத்தை பிருத்விராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து பிருத்விராஜ் இயக்கத்திலான அடுத்த படத்தை பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.
ஆனால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். அதன் பின்னர் லாக்டவுன் சமயத்தில் தன் மகள் சொன்ன ஒரு ஒற்றை வரிக் கதை தன்னிடம் கூறியதாகவும் அந்த கதையால் தான் ஈர்க்கப்பட்டதாலும், எனினும் அந்த கதையை படமாக்க முடியாத சூழல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே வேறொரு கதையை இயக்க முடிவு செய்துள்ள பிருத்விராஜ் அந்த படத்தில் மோகன்லாலை மீண்டும் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா மற்றும் கனிகா மற்றும் பலர் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.