18 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ஷங்கருடன் இணையும் பிரபலம்... வைரலாகும் ‘நெகிழ்ச்சி’ டிவீட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் படத்தை அடுத்து இயக்க இருக்கிறார் ’பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர்,. இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதே டோலிவுட்டின் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்தது.

தற்போது அந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அது வேறு யாருமல்ல... இயக்குனர் ஷங்கரால் அடையாளம் காணப்பட்ட இசையமைப்பாளர் தமனே தான்!

2003 ம் ஆண்டு வெளியான “பாய்ஸ்” படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமான தமன் பின்னர் தெலுங்கு பட உலகின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். தெலுங்கின் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து தற்போது தனக்கென தனித்த ரசிகர் பட்டாளத்தையும், பல படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்.

இயக்குனர் ஷங்கருடன் மீண்டும் இணைந்தது குறித்து இசையமைப்பாளர் தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் கீழ் உள்ளவாறு குறிப்பிட்டுள்ளார் : -

”இந்த படத்தில் இணைவதில் பெருமைப்படுகிறேன். இந்த படத்தின் இசை மறக்க முடியாததாக இருக்கும்... இயக்குனர் ஷங்கரை 2000-ஆம் ஆண்டிலிருந்து கவனித்து வருகிறேன். அப்போதிலிருந்து இப்போது வரை அவரின் அறிவியல் சிந்தனை, சினிமாவில் புது முயற்சிகள் இன்னும் குறையவில்லை... நேர்மறையான எண்ணங்கள் அவரிடம் விரவியுள்ளன!”

தொடர்புடைய இணைப்புகள்

After long year director shankar join again with famous person

People looking for online information on Bruce Lee - The Fighter, Ram Charan, S.S.Thaman will find this news story useful.