அப்டி போடு! அதே சக்ஸஸ் ஃபார்முலாவில் விஜய் ஆண்டனியின் அடுத்த பட டைட்டிலா? மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருவெடுத்த விஜய் ஆண்டனி இசை மற்றும் நடிப்பு இரண்டிலுமே நற்பெயர் பெற்றார். இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் படத்துக்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, விஜய் ஆண்டனி எடிட்டிங் செய்திருந்தார்.

யு/ஏ சென்சார் சர்டிபிஃகேட் வாங்கியிருந்த இந்த திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது. இன்ஃபினிட்டி பிலிம்ஸ் வெளியிட்டிருந்தது.

முன்னதாக இந்த திரைப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் ஆண்டனி பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியிருந்தார். அதில் “என்னதான் ஒரு கற்பனை இருந்தாலும், அதை நம்பி, அதன் மூலம் மற்றவர்களுக்குதான் புகழ் வரும் என்று தெரிந்தும், பண முதலீடு செய்யும் தயாரிப்பாளர் முக்கியமானவர். அவருக்கு நன்றி.” என்று குறிப்பிட்டார். மேலும், “இந்த படம் வெற்றியடைந்தது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. நன்றி கமல் போஹ்ரா சார், தனஞ்செயன் சார், பங்கஜ் போஹ்ரா சார்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்திருந்த இன்ஃபினிட்டி பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக இணைகிறார். இந்த திரைப்படத்தின் இதர விபரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்த படக்குழுவினருடன் விஜய் ஆண்டனி எடுத்துக்கொண்ட ஃபோட்டோஷூட்டை அவரே பகிர்ந்துள்ளதை அடுத்து வைரலாகி வருகிறது.

இதனிடையே இந்த படத்துக்கு ‘கொலை’ என டைட்டில் வைத்திருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. முன்னதாக சைத்தான், பிச்சைக்காரன், கொலைகாரன், திமிரு பிடிச்சவன் என விஜய் ஆண்டனியின் பட டைட்டில்கள் அனைத்துமே வலுவான மற்றும் மிரட்டலான டைட்டிலாக இருந்துள்ளன. அவை வெற்றியும் தந்துள்ளன என்பதால் அதே சக்ஸஸ் பாணியில் இப்போது விஜய் ஆண்டனி தமது புதிய படத்துக்கு ‘கொலை’ என டைட்டில் வைத்திருப்பதாக பேசப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ மற்றும் உறுதியான அறிவிப்பு அக்டோபர் 15-ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி இயக்கத்தில் நடித்த, பிச்சைக்காரன் திரைப்படம், பிளாக் பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து, தற்போது பிச்சைக்காரன் படத்தை அடுத்த பாகத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

After kodiyil oruvan vijay antony next movie announcement

People looking for online information on Kodiyil Oruvan, Kodiyil Oruvan Tamil, Vijay Antony will find this news story useful.