ஜோதிகாவின் உதவியால் தலைகீழாக மாறிய அரசு மருத்துவமனை.. எப்படி இருக்கு பாருங்க.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜோதிகாவின் உதவியால் மாறியுள்ள அரசு மருத்துவமனையின் புகைப்படங்கள் வைரல் அடித்து வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வந்தவர் ஜோதிகா. தமிழ் சினிமா டாப் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து அசத்திய இவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமாருடன் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்ற ஜோதிகா, அங்குள்ள அரசு மருத்துவமனையின் நிலையை கண்டு அதை சீரமைக்க உதவுவதாக கூறினார். தற்போது அவரது உதவியால் புதுப்பிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. மேலும் இந்த உதவிக்காக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

ஜோதிகாவின் உதவியால் தலைகீழாக மாறிய அரசு மருத்துவமனை.. எப்படி இருக்கு பாருங்க.!! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மருத்துவமனைக்கு ஜோதிகா செய்த உதவி | after jyothika's help thanjavur government hospital photos goes viral

People looking for online information on Government Hospital, Jyothika, Jyothika Help will find this news story useful.