சன்டி.வி.யில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர்.
![after Ganesh actress nandita swetha guest roll in sun tv serial after Ganesh actress nandita swetha guest roll in sun tv serial](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/after-ganesh-actress-nandita-swetha-guest-roll-in-sun-tv-serial-new-home-mob-index.jpg)
கடந்த வாரம் சன் டி.வியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு, ‘கண்ணான கண்ணே’ சீரியலின் சிறப்பு காட்சி ஒளிபரப்பானது. இந்த ஒரு மணிநேர சிறப்பு காட்சியில், பிரபல பிக்பாஸ் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் போலீசாக தோன்றி சண்டைக் காட்சிகளில் எல்லாம் ஈடுபட்டு அசத்தினார். இதே சீரியலின், இதே காட்சியில் பிரபல நடிகர் ரியாஸ்கான் தோன்றியிருந்தார்.
‘என்னடா இது திரைப்பட பிரபலங்கள் எல்லாம் சீரியல்களில் கேமியோ ரோல் செய்து மாஸ் பண்ணுகிறார்கள்’ என்று சீரியல்கள் ரசிகர்கள் குஷி ஆகி விட்டனர். இந்த கொண்டாட்டம் அடங்குவதற்குள், அடுத்த கொண்டாட்ட அறிவிப்பு ப்ரோமோவை வெளியிட்டது சன் டிவி.
ஆம், சன் டி.வியில் வரவிருக்கும் ஞாயிறு அன்று மதியம் 2 மணிக்கு, ‘அபியும் நானும்’ சீரியலின் சிறப்பு ஒரு மணி நேர ஒளிபரப்பு காட்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் பிரபல இளம் ஹீரோயின் நந்திதா ஸ்வேதா சிறப்பு கேமியோ ரோலில் தோன்றுகிறார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடித்த ‘அட்டகத்தி’ திரைப்படம் மூலம் பிரபலமான நந்திதா ஸ்வேதா, பின்னர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தின் மூலம் இன்னும் புகழ் பெற்றார்.
அண்மையில் செல்வராகவன் இயக்கத்தில் SJ சூர்யா நடித்து வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.