'தந்தை இறந்த சுவடு மறைவதற்குள்' கொரோனாவுக்கு பலியான மகன்!.. சோகத்தில் இசை ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற சித்தார் ப்ளேயர் பிரதீக் சவுத்ரி கோவிட் -19 காரணமாக கடந்த வியாழக்கிழமை இறந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல இசை ஆசிரியர் பவன் ஜா இதுபற்றி கூறும்போது, 49 வயதான பிரதீக் சவுத்ரி, கோவிட் தொடர்பான சிக்கல்களுக்குப் பிறகு டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் நம்பிக்கைக்குரியவரும் திறமையானவருமான தீபு சவுத்ரியின் மகன் பிரதீக் சவுத்ரி இல்லை. ஐ.சி.யுவில் கடுமையாக போராடி வந்தார், நேற்று அவர் தனது தந்தையுடன் சேர்ந்து நித்தியத்தின் பாதையில் சென்றார். ஓய்வெடுங்கள்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவிருந்த பிரதீக் சவுத்ரியின் உடல்நிலை எதிர்பாராத விதமாக திடீரென்று மோசமாகிவிட, அவர் தனது தந்தையுடன் ஜிடிபி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு மக்கள் இரங்கல் செய்திகளை ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர்.

பிரதீக் சவுத்ரி, டெல்லி பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் பேராசிரியராகவும் இருந்தார். இவருக்கு ரூனா என்கிற மனைவியும், குழந்தைகள் ராயணா மற்றும் ஆதிராஜ் உள்ளனர்.  தீபு சவுத்ரி என்று பிரபலமாக அறியப்பட்டவரும், மூத்த சித்தாரிஸ்ட்டுமான தேவப்ரதா சவுத்ரி கடந்த வாரம் கோவிட் -19 காரணமாக இறந்தார். இவரது மகன் தான் பிரதீக் சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: சிவாஜிக்கு மகனாக நடித்த பிரபல பழம் பெரும் நடிகர் கொரோனா பாதிப்பால் மரணம்!

After dad died last week son sitar player dies due to covid19

People looking for online information on Prateek Chaudhuri will find this news story useful.