பில்லா-2, அஞ்சான் வரிசையில் பீஸ்ட்! இந்தியாவிலேயே முதல் முறையாக புதிய வகை கேமராவில் ஷூட்டிங்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

Advertising
>
Advertising

இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 4-கட்ட படப்பிடிப்புகள் முடிந்தநிலையில் பீஸ்ட் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கான வேலைகள் துவங்கி உள்ளன. இதனை முன்னிட்டு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவை இட்டு, அதில் பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும் கூறி இருந்தார். 

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அறிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் இதற்கு முன் தல அஜித் நடித்த பில்லா-2 (2012) படத்திற்கு RED EPIC கேமரா இந்தியாவிலேயே முதன் முறையாக ஒளிப்பதிவாளர் R D ராஜசேகர் ISC அவர்களால் பயன்படுத்தப்பட்டது. பின் சூர்யா நடித்த அஞ்சான் (2014) படத்திற்கு RED Dragon கேமரா உலகிலேயே முதன் முறையாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ISC அவர்களால் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம். 

தொடர்புடைய இணைப்புகள்

After Billa2 and Anjaan Now Beast Movie shot in new RED Camera

People looking for online information on Anjaan, Beast, Billa2, Manoj Paramahamsa, R D Rajasekhar, Santhosh Sivan will find this news story useful.