செம...அஜித் பட இயக்குனருடன் இணையும் சுந்தர். C ! எந்த படத்தின் இரண்டாம் பாகம் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் 30க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். அவற்றில் "மேட்டுக்குடி", "உன்னைத்தேடி", "உள்ளத்தை அள்ளித்தா", "அருணாச்சலம்", "கிரி", "கலகலப்பு", "அரண்மனை" போன்றவை வெற்றி படங்களாக அமைந்தன.

AFTER ARANMANAI 3, SUNDAR C TEAMS UP WITH AJITH DIRECTOR

பத்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவற்றில் "தலைநகரம்", "வீராப்பு", "சண்டை", "ஆயுதம் செய்வோம்" போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.

இதில் 2006- ஆம் ஆண்டு வெளியான “தலைநகரம்” படம் வணிக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் வரும் நாய் சேகர் வடிவேலு காமெடி காட்சிகள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

AFTER ARANMANAI 3, SUNDAR C TEAMS UP WITH AJITH DIRECTOR

இந்த படம் மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த அபிமன்யூ படத்தின் தழுவலாகும்.

கேங்க்ஸ்டர் பாணியில் அமைந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை 15 வருடங்களுக்கு பிறகு எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. முதல் பாகத்தை எடுத்த இயக்குனர் சுராஜீக்கு பதிலாக இரண்டாம் பாகத்தை V. Z துரை இயக்குகிறார். இவர் தல அஜித்தை வைத்து முகவரி படத்தை இயக்கியவர். “தொட்டி ஜெயா” எனும் கேங்க்ஸ்டர் படத்தை சிம்புவை வைத்து ஏற்கனவே இயக்கியுள்ளார்.  இந்த “தலைநகரம்” இரண்டாம் பாகமும் கேங்ஸ்டர் பாணியிலேயே அமைய அதிக வாய்ப்புள்ளது.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.  வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

V.Z துரையும், சுந்தர். C யும் ஏற்கனவே “இருட்டு” படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சுந்தர். சி அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி கொண்டு இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

AFTER ARANMANAI 3, SUNDAR C TEAMS UP WITH AJITH DIRECTOR

People looking for online information on Ajith Kumar, Iruttu, Sundar C, Vadivelu will find this news story useful.