இந்த கொரோனா வைரஸ் லாக்டவுன் காலக்கட்டத்தில் பிரபலங்கள் திருமண நிகழ்வுகள், குழந்தை பிறப்பு போன்ற சம்பவங்கள் மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரபல டிவி சீரியல் நடிகை அஞ்சும் ஃபரூகி தனக்கு குழந்தை பிறந்ததை அறிவித்துள்ளார்.
தனது மகளின் பிஞ்சு விரல்களை புகைப்படமாக பகிர்ந்த அவர், என் மகள் ஹனேயாா செய்யத்தை பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு சேர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஞ்சும் ஃபரூகி கடந்த 2013 ஆம் ஆண்டு ஷாகிப் செய்யத் என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு அவருக்கு மகள் பிறந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : Anjum Farooki