2.O படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ், SK நடித்த ‘கனா’ படம் பிரபல மொழியில் ரிலீஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை,  27, பிப்ரவரி 2022: சிவகார்த்திகேயனின் Sivakarthikeyan Productions நிறுவனத்தின் சார்பில் முதல் தயாரிப்பாக உருவான படம் “கனா”.
இப்படம் தற்போது சீனாவில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில், சீன மொழியில் வரும் மார்ச் 18-ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

கனா - திரைப்படம்

அருண் ராஜா காமராஜ் இயக்கிய இந்த படத்திற்கு, திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன்.B ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன்
படத்தொகுப்பு செய்ய,  கலை இயக்குநராக லால்குடி இளையராஜா பணியாற்றினார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கலை அரசு இணைத் தயாரிப்பு செய்திருந்தார்.

சிவகார்த்திகேயன் கௌரவ தோற்றத்தில்

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் முதன்மை பாத்திரங்களிலும் சிவகார்த்திகேயன் கௌரவ தோற்றத்திலும்  நடித்திருந்த “கனா” திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஒருமித்த பாரட்டுக்களை பெற்று, பிரமாண்ட வெற்றி பெற்றது. வசூல் ரீதியாக சாதனை படைத்த இப்படம் மொழிகள் தாண்டியும் பாராட்டு பெற்றது.

சீன மொழியில் கனா

இந்நிலையில் தற்போது இப்படம் சீனாவில் வரும் மார்ச் 18 ஆம் தேதி மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. Yi Shi Films சார்பில் Mr. AlexiWoo, Ms. SarinaYuanfeiWang  தமிழ் மொழியில், சீன மொழி சப் டைட்டிலுடனும்,  நேரடி சீன மொழியிலும் இப்படத்தை வெளியிடுகின்றனர்.  முன்னதாகவே சீனாவில் வெளியாகவேண்டிய  இப்படம் கோவிட் காரணங்களால்  இப்போது வெளியாகிறது.

ரஜினி படத்துக்கு பின் சீன மொழியில் கனா..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்திற்கு பிறகு சீனாவில் வெளியாகும் தமிழ்ப்படமாக இப்படம் சாதனை படைக்கவுள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த படக்குழுவினரை நடிகர் சத்யராஜ் சீன மொழியில் வாழ்த்தியுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது.

Also Read: மாஸ் தான்.. அஜீத் நடித்த வலிமை படத்தில் ஒரே கேரக்டரில் நடித்துள்ள அம்மா & மகள்..

2.O படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ், SK நடித்த ‘கனா’ படம் பிரபல மொழியில் ரிலீஸ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

After 2.O SK Aishwarya rajesh Kanaa Movie releases in chinese

People looking for online information on Aishwarya Rajesh, Arunraja Kamaraj, Kanaa, Sivakarthikeyan, Sivakarthikeyan Productions will find this news story useful.