சூர்யா நடிக்கும் 39வது படத்தினை சூர்யாவின் படத்தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 'ஜெய்பீம்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார்.

இந்த படத்தை 'கூட்டத்தில் ஒருத்தன்' படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். அகரம் பவுண்டேஷனின் மிக முக்கிய வழிகாட்டல் குழு பொறுப்பில் உள்ளவர் தான் தா.செ ஞானவேல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யா உடன் 'கர்ணன்' ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோமோல் ஜோஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் '2d என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டான் இசையமைக்கிறார்.
இந்தப்படம் அமேசான் பிரைமில் வரும் நவம்பர் 2 ஆம் நாள் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படம் சென்சார் போர்டு மூலம் தணிக்கை செய்யப்பட்டு A சான்றிதழ் பெறப்பட்டதாக படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் அதிகாரப்பூர்வமாக நமது Behindwoods சேனலுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பழங்குடியின மக்களின் பின்னணியில் வழக்கறிஞராக சூர்யா நிற்பதுபோல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் சூர்யா நடித்த நந்தா, பிதாமகன், ஆய்த எழுத்து, ஆறு, ரத்த சரித்திரம் போன்ற படங்கள் A சான்றிதழ் பெற்றன. கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளியான ரத்த சரித்திரம் படம் A சான்றிதழ் பெற்றது. A சான்றிதழ் பெற்ற படங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்களே பார்க்க வேண்டும் என்பது வழிகாட்டல் ஆகும்.