"ஒண்ணாம் நம்பர் அராத்த காணல".. தனாவுக்கு ADK டெடிகேட் செய்த பாட்டு.. சிரிச்ச ஹவுஸ்மேட்ஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "AD ஷூட்ல பிஸி".. குயின்சி சொல்லி முடிச்சதும் விக்ரமன் கமெண்ட்.. மனுஷன் தமாஷா பேசுறாப்ல 😂

முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில்,   Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் Guest ஆக வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் கார்டன் பகுதியில் அனைவரும் அமர்ந்திருக்க ADK பாடல் ஒன்றை பாடுகிறார். அதில், வீட்டுக்குள் மீண்டும் வந்திருக்கும் போட்டியாளர்களை வரவேற்று பாடுகிறார் அவர். முதலில் GP முத்துவை வெல்கம் செய்த ADK பின்னர் அவருடைய பிரிய உணவான மீன் குழம்பு பற்றியும் பாட அங்கிருந்த அனைவரும் சிரிக்கின்றனர். தொடர்ந்து மணிகண்டா பற்றியும் அவரை பிக்பாஸ் வீடே மிஸ் செய்ததாகவும் ராகத்துக்கு தகுந்தாற்போல பாடுகிறார்.

இதே போல ராபர்ட் மாஸ்டர், அசல் கோலார், சாந்தி உள்ளிட்டோரை பற்றியும் பிக் பாஸ் வீட்டில் பாடி இருந்தார். இந்த நிலையில், தனலட்சுமி பற்றி ADK பாடும் பாடல் அதிக கவனம் பெற்றுள்ளது.

கடைசியாக தனலட்சுமியை பற்றி பாடுவதற்கு முன்பாக, தனாவை காணவில்லை என குறிப்பிட்டபடி பாட ஆரம்பிக்கும் ADK, "ஒண்ணாம் நம்பர் அராத்த காணல. வர்றதுக்குள்ள நானும் பாடுறேன். வந்தா செம சண்டை நடக்கும் பார். வாய தொறந்தா கிழியும் பார். கசமுச கசமுசன்னு கத்துவா. அப்புறம் குண்ட தூக்கிப் போட்டு ஓடுவா" என யாகத்திற்கு தகுந்தார் போல இந்த வரிகளை வைத்து ADK தனலட்சுமியை பற்றி பாடிக் கொண்டிருக்கும் போதே அங்கு இருக்கும் அனைத்து ஹவுஸ்மேட்ஸ் கத்தி சிரிக்க தொடங்கியிருந்தனர்.

Also Read | "நீ எப்படி இவ்ளோ தூரம் வந்தே, புரியவே இல்ல எனக்கு".. ஹவுஸ்மேட் மூஞ்சுக்கு நேரா எகிறிய அசிம்!!

தொடர்புடைய இணைப்புகள்

ADK songs for re entry house mates in task bigg boss

People looking for online information on ADK, ADK songs, ADK songs for re entry house mates, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil will find this news story useful.