ஷிவினை வச்சு ADK ஸ்பாட்ல பாடிய பாடல்.. டக்குன்னு ஒன்னு கூடிய ஹவுஸ்மேட்ஸ்.. இன்றைய பிக்பாசில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்த ADK வின் பெற்றோர்.. நெகிழ்ந்துபோன பிக்பாஸ் வீடு..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். இப்படி பிக்பாஸ் வீடு கலகலப்புடனும் நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் நிறைந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில், புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதில், டைனிங் பகுதியில் ஷிவின் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு எதிர்புறத்தில் ADK, கதிர், அமுதவாணன் மற்றும் மைனா ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். சக போட்டியாளர்கள் உற்சாகப்படுத்த ADK ஷிவின் குறித்து பாடல் ஒன்றை பாடுகிறார். அதில் கதிர் குறித்தும் அவர் பாடுகிறார். அப்போது அருகில் அமர்ந்திருந்த அமுதவாணன் பாடலுக்கு இடையே சில வரிகளை பாட, இதில் மைனாவும் இணைந்துகொள்கிறார். இதனை கேட்டு சிரித்தபடி அமர்ந்திருக்கிறார் ஷிவின்.

 

Also Read | தனலட்சுமி எலிமினேட் ஆனதால் வருத்தப்பட்ட பிரபல நடிகை.. மைனா சொன்ன தகவல்.. அசீம் போட்ட கமெண்ட்..!

 

தொடர்புடைய இணைப்புகள்

ADK Sing a song for shivin housemates joints to him in BB6

People looking for online information on ADK, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Shivin will find this news story useful.