ஹவுஸ்மேட்ஸ் எல்லாரையும் பத்தி ADK -வின் RAP பாடல்.. அசந்துபோன போட்டியாளர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | Thalapathy 67: "இன்னும் இத்தனை நாள்ல தளபதி 67 அப்டேட்".. லோகேஷ் கனகராஜ் ரெடி!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ் மற்றும் குயின்சி ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

இதனிடையே, Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் கார்டன் பகுதியில் அனைவரும் அமர்ந்திருக்க ADK பாடல் ஒன்றை பாடுகிறார். அதில், வீட்டுக்குள் மீண்டும் வந்திருக்கும் போட்டியாளர்களை வரவேற்று பாடுகிறார் அவர். முதலில் GP முத்துவை வெல்கம் செய்த ADK பின்னர் அவருடைய பிரிய உணவான மீன் குழம்பு பற்றியும் பாட அங்கிருந்த அனைவரும் சிரிக்கின்றனர். தொடர்ந்து மணிகண்டா பற்றியும் அவரை பிக்பாஸ் வீடே மிஸ் செய்ததாகவும் ராகத்துக்கு தகுந்தாற்போல பாடுகிறார்.

இதனையடுத்து ராபர்ட் மாஸ்டரின் செய்கைகளை பாடலாக பாடிய ADK, அசல் கோலார் பற்றி பாடும்போது அவர் தன்னுடைய தம்பி என்கிறார். பின்னர் சாந்தி குறித்து பாடலில் அவருடைய சமையல் பற்றி கச்சிதமாக வார்த்தைகளை தேர்வு செய்து பாடுகிறார். இறுதியாக தனலட்சுமி பற்றியும் பாடி ADK நிறைவு செய்ய போட்டியாளர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி அவரை பாராட்டுகின்றனர்.

Also Read | #BREAKING: வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' திரைப்படத்தின் ரிலீஸ் எப்போ..? செம அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

ADK Sing a Rap song about BiggBoss Contestants in House

People looking for online information on ADK, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Biggboss contestants will find this news story useful.