"ஆத்தாடி இவ்வளவு நாள் அவருகூடவா இருந்தேன்".. BB போட்டியாளர் பற்றி ADK நெகிழ்ச்சி POST..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ADK Praises Vikraman after he eliminated from Biggboss6
Advertising
>
Advertising

Also Read | இந்தா வந்துடுச்சுல்ல பணமூட்டை.. எடுத்துக்கிட்டு வெளியே போகலாம்-னு அறிவித்த பிக்பாஸ்..

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

ADK Praises Vikraman after he eliminated from Biggboss6

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.

அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

வெளியே சென்றிந்த ADK முன்னதாக தனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விக்ரமனை பாராட்டி பதிவு ஒன்றையும் எழுதியுள்ளார். அந்த பதிவில்,"இப்போதுதான் விக்ரமனுடைய விவாதங்கள் மற்றும் நேர்காணல்களை பார்த்தேன். இத்தனை நாள் நாம் அனைவரும் ஒரு சிங்கத்துடன் வாழ்ந்தோமா? நாங்கள் நண்பர்களாக இணைந்ததில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்!" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Also Read | "பிக்பாஸ்-க்கு முன்னாடியே மைனா போன்ல சொன்ன விஷயம்".. போட்டு உடைத்த மகேஷ்வரி..!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ADK Praises Vikraman after he eliminated from Biggboss6

People looking for online information on ADK, ADK Praises Vikraman, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.