ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | "அவரோட Friend-ஆ பழகு".. மணிகண்டாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த அட்வைஸ்..!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.
மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர்.
Freeze Task-ல் அனைவரும் அமர்ந்திருக்க 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' பாடல் ஒலிக்கிறது. அப்போது உள்ளே வரப்போவது யார்? என மணிகண்டா, கதிர் ஆகியோர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது மெயின் டோர் வழியாக ADK-வின் பெற்றோர் உள்ளே நுழைகின்றனர். இதனை கண்டதும் மணிகண்டா ADK-வை அழைக்கிறார். இதனால் உற்சாகம் அடைந்த ADK முன்பக்க வாசலுக்கு விரைந்து ஓடுகிறார்.
வீட்டுக்குள் வந்த அவரது பெற்றோரை மைனா கட்டியணைத்து வரவேற்க, ரச்சிதா, கதிர் உள்ளிட்டோர் அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுகின்றனர். பின்னர் அங்கு ஓடிவந்த ADK தனது தந்தையை கட்டியணைத்துக்கொள்கிறார். பெற்றோரை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அவர் கண்கலங்குகிறார். அவரை அவரது தந்தை தேற்ற, சிரித்தபடி "ஹவ் ஆர் யூ மிஸ்டர் கனகரத்தினம்?" என ADK சிரித்தபடி கேட்க, அவரது தந்தை "ஃபைன்" என்கிறார். இதனை கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரிக்கின்றனர். இதனிடையே அங்குவரும் அசீமை ADKவின் தந்தை நலம் விசாரிக்கிறார். அதன்பின்னர் பிக்பாஸ் எல்லோரும் ரிலீஸ் சொல்ல, ADKவின் பெற்றோர் உள்ளே அழைத்துச் செல்கின்றனர்.
Also Read | கதிரவனுக்காக பிக்பாஸ் வீட்டுக்கு வந்த Guest.. மனுஷன் நம்பவே இல்லையே.. நெகிழ்ச்சி தருணம்