ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Also Read | திருமணமாகி ஒரு மாதம்.. கௌதம் கார்த்திக்கை டேக் செய்து மஞ்சிமா நெகிழ்ச்சியான பதிவு..!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.
மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். அப்போது, போட்டியாளர்கள் அனைவரும் ADKவின் பெற்றோருடன் பேசுகின்றனர். அந்த இடத்தில் நின்றிருந்த ADK அசீமின் தோள்மீது கைபோட்டு, "அதிக சண்டை போட்டது இந்தப்பய தான்" என சிரித்துக்கொண்டே கூறுகிறார். அதனை கேட்ட அவரது தந்தை, "சண்டை போட்டாலும் அதை அடுத்த நிமிஷமே மறந்துடறாரு. உங்களை பத்தி அடிக்கடி பேசுவேன்" என அசீமிடம் கூறுகிறார்.
உடனே, அசீம் நன்றி தெரிவிக்க அருகில் அமர்ந்திருந்த ADKவின் தாய்,"நல்லா பேசுறீங்க" என அசீமிடம் சொல்கிறார். அப்போது,"அதுதான் அவரோட டேலண்ட்" என ADKவின் தந்தை கூற அசீம் இதனை கேட்டு புன்னகைக்கிறார்.
Also Read | அசிமை பார்க்க வரும் அரசியல் பிரமுகர்?.. விக்ரமன் கிட்ட ADK சொன்ன வார்த்தையால் பரபரப்பு!!..