ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Also Read | "பிக்பாஸ்-ல எனக்கு ரொம்ப பிடிச்சவங்க இவங்க தான்".. வெளியேறிய பின்னர் உருக்கமாக பேசிய ரச்சிதா..!
இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.
இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். இந்நிலையில், வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு அசல் கோலார் அங்கு வருகிறார். அவருடன் பேச ADK முற்படுகிறார். ஆனால் அசல் பேச தயங்குகிறார். மேலும் அசல் பேசுகையில்," உங்களை பத்தி சில விஷயங்கள்லாம் தெரியுது. இந்த வீட்ல நான் இருந்தப்போ சில விஷயங்கள் பார்க்க முடியல. ஆனா வெளியே போயிட்டு சில விஷயங்கள்லாம் பார்த்தேன். அதெல்லாம் எனக்கு புடிக்கல" என்கிறார்.
அப்போது ADK," என்ன விஷயம்னு சொல்லு. உன்ன பத்தி ஏதாவது தப்பா பேசுனேனா?" எனக் கேட்க, "தப்பா இல்ல. ஆனா உள்ள வரும்போதே உங்ககிட்ட அவ்ளோவா பேசவேண்டாம்னு நெனச்சிட்டு தான் வந்தேன்" என்கிறார் அசல்.
தொடர்ந்து பேசும் ADK,"சரி பேசாத. ஆனா என்னன்னு சொல்லிட்டு போ" என்கிறார். அதற்கு அசல்,"பாக்குறப்போ நீங்க ஒன்னு பண்றிங்க. ஆனா பின்னாடி அது வேற ஒன்னா இருக்குது. வந்த அன்னைக்கே அத பத்தி பேசவேண்டாம்னு நெனைக்கிறேன். அது என்ன விஷயம்னு எனக்கு தோணுச்சுன்னா நான் சொல்றேன். இல்லைன்னா நீங்க வெளில போயிட்டு பாத்துக்கோங்க" என்கிறார்.
ADK மீண்டும் "உன்ன பத்தி ஏதாவது பேசுனேனா?" என கேட்க, "வேண்டாம் விடுங்க. அப்பறம் நான் நெறய விஷயம் பேசுற மாதிரி வரும்" என்கிறார். அப்போது, ADK "பேச விருப்பம் இல்லைன்னா விடு. பிரச்சனையே இல்ல. அதுனால நான் எதையும் இழக்க போறது கிடையாது" என்கிறார். தொடர்ந்து அசல் அங்கிருந்து செல்கிறார்.
அதன்பின்னர் அசீம், கதிரவன், ADK ஆகியோர் தனியாக அமர்ந்திருந்திருக்கின்றனர். அப்போது, ADK கண்கலங்குவதை பார்த்துவிட்டு அசீம் மற்றும் கதிர் ஆகிய இருவரும் அவரை சமாதானம் செய்கின்றனர். அப்போது,"அவன் உள்ள வந்தபோது ஆசையா போய் கட்டிப்புடிச்சேன். ஆனா மூஞ்சில அடிச்சமாதிரி பேசிட்டான்" என்கிறார். அவரை தேற்றும் அசீம், "அவன் எதை வச்சு சொன்னான்னு தெர்ல. ரொம்ப நாள் கழிச்சு வந்ததுனால எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரியாம இருந்திருக்கும். ரிலாக்ஸ் ADK" என்கிறார்.
பின்னர் ADK அங்கிருந்து தனியாக சென்று அமர்கிறார். அப்போது அவர் அருகே சென்று விக்ரமன் அமர்ந்து அவருக்கு ஆறுதல் கூறுகிறார். ADK அழுவதை கண்ட மைனா வேகமாக வந்து அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறுகின்றார். இந்த சம்பவத்தால் போட்டியாளர்கள் சோகமடைந்திருக்கின்றனர்.
Also Read | "அதோட முடிச்சுக்கோங்க.. நான் பேசுற மாதிரி ஆகிடும்".. ADK பற்றி காட்டமாக பேசிய அசல்