ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்றிருந்தது. நிறைய கடினமான போட்டிகள் இந்த சுற்றில் அரங்கேறி இருந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி இருந்தார்கள்.
மிதிவண்டி டாஸ்க், பிரெட் டாஸ்க், Debate டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது. இப்படியாக தற்போது Ticket To Finale டாஸ்க்கும் தற்போது முடிவுக்கு எட்டி உள்ளது.
அது மட்டுமில்லாமல், இந்த TTF டாஸ்க்குகளுக்கு இடையே ஏராளமான விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்கள் கூட அரங்கேறி இருந்தது. ஆனாலும் விளையாட்டு முடிந்த பின்னர், அனைவரும் மீண்டும் பழையது போல உற்சாகமாக இருக்கவும், கலகலப்பாக ஒருவரை ஒருவர் ஜாலியாக கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர்./
இதற்கிடையே, BB Critics விருதுகள் வழங்கப்படுகிறது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.
இதற்கு மத்தியில் விக்ரமன் குறித்தும் நிறைய பேர் கருத்து தெரிவித்து வருகின்றனர். Ticket To Finale டாஸ்க் முன்பு வரை, விக்ரமன் தொடர்ந்து நியாயம் பேசுவது உள்ளிட்ட விஷயங்களில் தான் அதிகம் முனைப்புடன் இருப்பார் என்றும் டாஸ்க்கில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாதவர் என்றும் கூட கருத்துக்கள் நிலவி வந்தது. இதனை சில ஹவுஸ்மேட்ஸ் கூட குறிப்பிட்டிருந்தனர். அப்படி ஒரு சூழலில், Ticket To Finale டாஸ்க்கில் விக்ரமன் விளையாட்டுத் திறனை பல போட்டியாளர்கள் பாராட்டியும் வருகின்றனர்.
கேமில் சிறப்பாக ஆர்வம் காட்டுகிறார் என்றும், மிகவும் முனைப்புடன் அதிக பலத்துடன் செயல்படுகிறார் என்றும் நிறைய பேர் பாராட்டி வருகின்றனர். அப்படி ஒரு சூழலில், விக்ரமனின் திறன் பற்றி ADK பேச, அதன் பின்னர் ஷிவின் பேசும் விஷயம், தற்போது அதிக வைரலாகி வருகிறது.
விக்ரமன் குறித்து பேசும் ADK, "ஆனா, நீங்க சரியான ஸ்ட்ராங் விக்ரமன். Will Power அதிகம் உங்களுக்கு. நம்ம என்ன நெனச்சோம். அவரு டாஸ்க் ஆட மாட்டாரு. ஒழுங்கா டாஸ்க்ல பங்கெடுக்க மாட்டாருன்னு எல்லாம் சொன்னோம். பாருங்க அடிச்சு விளையாண்டாரே. நல்லா ஆடுனாரு டாஸ்க்ல" என தெரிவிக்கிறார்.
இதற்கு பதில் சொல்லும் ஷிவின், "அப்படி எல்லாம் இருந்தாங்கன்னா போய்டுவாங்க கெளம்பி. இந்த சீசன்ல எல்லாரும் சமமான போட்டியாளர் தான். அதுனால தான் இவ்ளோ தூரம் இருக்கோம் எல்லாரும்" என தெரிவிக்கிறார்.