கதிர் மாதிரி பேசிய ADK.. TIMING-ல சொன்ன விஷயம்.. விழுந்து சிரிச்ச கமல்ஹாசன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

Advertising
>
Advertising

கடந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்கள், அசிமின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்தனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், வார இறுதி என்பதால் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியாளர்களுடன் உரையாடி வருகிறார். அப்போது, கதிரவன் போல ADK நடந்துகொள்கிறார். அப்போது, "கதிரவன்-கிட்ட ஏதாவது கேக்கனும்னா கேளுங்க" என கதிரவனிடம் சொல்கிறார் கமல்ஹாசன். இதனால் போட்டியாளர்கள் அனைவருமே குஷியாகின்றனர். அப்போது கதிரவன் பேசுகையில்,"கதிரவன் நீங்க எல்லா விஷயத்தையும் டிப்ளமேட்டிக்கா டீல் பண்றிங்க. இதனால ரெண்டு பேருமே காயப்படல. அந்த விஷயத்தை எப்படி பாக்குறீங்க" என்கிறார்.

அப்போது, கதிரவன் போல நடந்துகொள்ளும் ADK,"நான் அதனால் பாதிக்கப்படாத வரையில் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை" என்கிறார். இதனால் போட்டியாளர்கள் ஆராவாரம் செய்ய, கமல்ஹாசன் இதைக்கேட்டு சிரிக்கிறார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

ADK Acts Like Kathiravan Kamal Haasan Laughs loud

People looking for online information on ADK, Biggboss6Tamil, Kathiravan will find this news story useful.