"ரச்சிதா ஊமைக் குசும்பு".. ADK சொன்ன வார்த்தை.. மறுத்து விக்ரமன் கொடுத்த புது விளக்கம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் ADK, அமுதவாணன், விக்ரமன், அசிம் மற்றும் கதிரவன் உள்ளிட்டோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ADK மற்றும் அமுதவாணன் ஆகியோர் ரச்சிதாவை ஊம குசும்பு என குறிப்பிடுவதாக தெரிகிறது. அவர் ஜெயிப்பதற்கு அமைதியாக இருந்து செயல்படுகிறார் என்பதை அப்படி தெரிவிக்கின்றனர்.

அந்த சமயத்தில் ஊமை குசும்பு என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கும் விக்ரமன், "ஊமைக் குசும்புக்கு அர்த்தம் வேற ADK. அமைதியா இருந்து பிரச்சனையை கிளப்பி விடுறது" என தெரிவிக்கிறார். ஆனால் இதனை மறுத்து பேசும் ADK, ஊமக்குசும்பு என்றால் அமைதியாக இருந்து காரியங்களை சாதிப்பது என்றும் இப்படி எல்லாமே அடங்கும் என்றும் குறிப்பிடுகிறார். இதனைத் தொடர்ந்து பேசும் விக்ரமன், "ஆனால் ஜெயிப்பதை ஊமக் குசும்பு என்று நாம் சொல்ல விட முடியாது" என தெரிவிக்கிறார்.

இறுதியில் இது பற்றி விளக்கம் கொடுக்கும் ADK, "ரச்சிதா சைலன்டா விளையாடுறாங்கல்ல. அது ஒரு Bad Attitudeன்னு நான் சொல்லவே இல்ல அது ஒரு குவாலிட்டி, திறமை" என்றும் கூறுகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

ADK about rachitha game spirit vikraman explain bigg boss

People looking for online information on ADK, Bigg boss 6 tamil, Vikraman will find this news story useful.