நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் BTS போட்டோ வெளியாகி உள்ளது.

Also Read | "டான்ஸ் ஆட முடியாது".. கால் வீங்கிய நிலையில் த்ரிஷா பகிர்ந்த போட்டோ! என்னாச்சு?
ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார். மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது.
இந்த பூஜையில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும் மற்ற முக்கிய வேடத்தில் மிஷ்கின் & சரிதா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள். இந்நிலையில் மாவீரன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த BTS போட்டோவை பகிர்ந்து இந்த தகவலை அறிவித்துள்ளார்.
Also Read | மணிரத்னம் வீட்டுக்கு சென்ற கமல்ஹாசன்.. எல்லா சொந்தகாரங்களும் இங்கே தான் இருக்காங்க!