நடிகை அதிதி ஷங்கரின் போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்தது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
மாநகரம் புகழ் எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு சண்டைப் பயிற்சி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர்.
விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அதிதி ஷங்கர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .
இந்நிலையில் ப்ளீட் நீல நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் அதிதி ஷங்கர் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராபர் கிரண் SA எடுத்துள்ளார். இந்த போட்டோஷூட்க்கு வினோதினி பாண்டியன் ஸ்டைலிஷாக பணிபுரிந்துள்ளார்.
அதிதி ஷங்கர் அடுத்ததாக சிம்புவுக்கு ஜோடியாக கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் சிம்புவின் 48வது திரைப்படமாகும்.
மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.