அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படம் "குற்றம் புரிந்தால்", இப்படத்தை நான் சிவனாகிறேன், இரும்பு மனிதன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய டிஸ்னி இயக்குகிறார்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | "எல்லா LOCK-ம் அபிஷேக்குக்கு தான் இருக்கு".. VJ மகேஸ்வரி உடனான காட்சி குறித்து மஹத்😍..
இப்படத்தில் ஆதிக் பாபு கதாநாயகனாக நடிக்கிறார், பெங்களூருவைச் சேர்ந்த அர்ச்சனா கதாநாயகியாக நடிக்கிறார் மேலும் எம் எஸ் பாஸ்கர், அபிநயா, அருள்டிஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பாடல்களை கபிலன் மற்றும் கார்த்திக் நேதா இருவரும் எழுதியிருக்கிறார்கள், கே கோகுல் ஒளிப்பதிவு செய்ய, கே எஸ் மனோஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பற்றி இயக்குனர் கூறுகையில், மர்ம நபர்களால் தம் குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சலால் விரக்தி அடைந்த ஒருவன், தன் கைகளில் நீதியை எடுக்கிறான், அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா இல்லையா என்பதை காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் கலந்து சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறத்தாழ 70 படங்களுக்கு மேல் புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்த ஆத்தூர் ஆறுமுகம் தயாரித்துள்ளார். இப்படம் இம்மாதம் 24 ந்தேதி திரைக்கு வருகிறது.
Also Read | ‘தங்க மீன்கள்’ ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படம்.. வெளியான அடுத்த அப்டேட்..!