டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா. இவரது நடிப்பில்; அடுத்ததாக பஹீரா திரைப்படம் வெளியாக உள்ளது.
Images are subject to © copyright to their respective owners
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், பஹீரா என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.
பஹீரா படத்தின் ட்ரைலர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெளியாகி இருந்த சூழலில், அதன் பின்னர் பட ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகாமல் இருந்தது. அப்படி ஒரு சூழலில், கடந்த சில தினங்கள் முன்பாக, மார்ச் 03 ஆம் தேதியன்று பஹீரா திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் பிரபு தேவாவுடன் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், நாசர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பாலரும் இணைந்து நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன், செல்வகுமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் எஸ் இசையமைத்துள்ளார். மேலும் பஹீரா படத்தின் புது ட்ரைலர் பிப்ரவரி 25 ஆம் தேதியன்று வெளியாகும் என்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
இந்த நிலையில், பஹீரா படத்தின் நடிகர் பிரபு தேவா மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில் பஹீரா திரைப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் குறித்து பேசி இருந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், "த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் வந்து ஒரு 25 சதவீத ஆடியன்ஸ்க்கு தான். அந்த படம் ஏன் ஹிட் ஆச்சு, ஏன் ஓடுச்சுன்னா ரீப்பிட் ஆடியன்ஸ்னால தான். அது பாய்ஸ், Men, கேர்ள்ஸ் மட்டும் தான் பார்த்தாங்க. Women, ஃபேமிலி எல்லாம் அந்த படத்தை பார்க்கல.
அந்த படம் வர்றதுக்கு முன்னாடியே நாங்க என்ன சொன்னோம்னா, பேமிலி எல்லாம் தியேட்டருக்கு வர வேணாம். இது உங்களுக்கான படம் இல்லன்னு தான் சொல்லி இருந்தோம். அப்படி சொல்லி தான் அந்த படத்தை ரிலீஸ் பண்ணோம். ஆனா, கொத்து கொத்தா ஃபேமிலி ஆடியன்ஸ் எல்லாம் தியேட்டருக்குள்ள உட்காந்திருந்தாங்க. அது தான் எனக்கு புரியல" என தெரிவித்தார்.
Images are subject to © copyright to their respective owners
தொடர்ந்து பகீரா படம் பற்றி பேசிய ஆதிக், "இந்த படம் வந்து ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸ்க்கான படம். அதுவும் யங்ஸ்டர்ஸ்க்கான படம். அதே மாதிரி Women கூட கனெக்ட் ஆகிப்பாங்க" என கூறினார்.