அதர்வா நடிக்கும் 'அட்ரஸ்' திரைப்படம்!! இப்படி ஒரு கேரக்டரா?.. வெளியான மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்நாட்டின் தென்மாவட்ட இளைஞர்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும் ஜனரஞ்சகமாகவும் பதிவு செய்த படம் "குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்".

தனது முதல் படத்திலே இளைஞர்களின் ஆதரவைப் பெற்று தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் இராஜமோகன். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “வானவராயன் வல்லவராயன்” படத்தை  இயக்கினார். இந்த படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பலரும் ரசிக்கும் வகையில் அமைந்தது.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட  “அட்ரஸ்” என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார். சுதந்திர இந்தியாவிற்கு பிறகு 1956-ல் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டது. அப்போது  தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமம் ஒன்றுக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதுதான் கதை. இப்படத்திற்கு  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இராஜமோகனே இயக்குகிறார்.

இந்தக் கதையில்"காளி" என்கிற புரட்சிகரமான கதாபாத்திரத்தில் அதர்வாமுரளி  நடித்து கொடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு ஒரு காதல் பாடல் காட்சியும், இரண்டு ஸ்டண்ட் காட்சியும், புரட்சிகரமான பல வசனங்கள் நிறைந்த காட்சிகளும்  இடம் பெற்றுள்ளது. இந்த கேரக்டர் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்க, இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பி ராமையா, தேவதர்ஷினி,  ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன்,  கோலிசோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

'மெரினா', ‘மூக்குத்தி அம்மன்’ , ‘நெற்றிக்கண்’ படங்களுக்கு இசை அமைத்த கிரிஷ் கோபாலாகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார். மலையும் மலை சார்ந்த பகுதியான கொடைகானலில் இருந்து 8 கிலோமீட்டர்  நடந்து சென்று வெள்ளக் கவி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர் படக்குழுவினர். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இதன் பர்ஸ்ட் லுக் & டீசர் இன்று  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Address movie steering atharva mass update release

People looking for online information on Address, Adharv, Pooja, Pooja Jhaveri will find this news story useful.