பொறியாளன், வில் அம்பு 2-ஆம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தவர் நடிகர் ஹரீஷ் கல்யாண்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து ரைசாவுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
தொடர்ந்து ஹரீஷ் கல்யாண், அண்மையில் சிம்புதேவன் இயக்கத்திலான ‘கசடதபற’ படத்தில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது பிரியா பவானி சங்கருடன் இணைந்து ‘ஓ மணப்பெண்ணே’ படத்தில் ஹரீத் கல்யாண் நடித்துள்ளார்.
இந்நிலையில் ‘அடங்காதே’ திரைப்படத்தை இயக்கிய சண்முகம் முத்துசாமியின் இரண்டாவது திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. இயக்குநர் சண்முகம் முத்துசாமி, ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைத்து நடித்த ‘அடங்காதே’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் ரிலீஸ்க்காக காத்திருந்த நிலையில், விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றியிருந்தார். இதேபோல் யோகிபாபு நடிப்பில் வெளியான தர்மபிரபு திரைப்படத்திலும் சண்முகம் முத்துசாமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் இந்த திரைப்படத்தை கே-13 படத்தை இயக்கிய SP சினிமாஸ் தயாரிக்கவுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: அப்படி போடு!! இந்த மிரட்டலான சஸ்பென்ஸ் த்ரில்லர் தமிழ் படத்தோட அடுத்த பாகம் வருதா?