செல்ல நாயின் மரணம்.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் உருக்கமான பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது செல்ல நாயின் மறைவையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | "ஷிவின்க்காக கொண்டு வந்த சர்ப்ரைஸ்?".. மைனாவின் கணவர் வெச்ச ட்விஸ்ட்!! bigg boss tamil 6

31 வயதாகும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர்.

ரகுல் ப்ரீத் சிங், தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங்கும் முக்கியமானவர்.

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தான் வளர்த்து வந்த நாய் மரணமடைந்துவிட்டதாக தெறிவித்திருக்கிறார். அதனுடன் உருக்கமான பதிவு ஒன்றை எழுதி இருக்கும் அவர் தனது செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில்,"16 வருடங்களுக்கு முன் எங்கள் வாழ்வில் வந்து எங்களை மிகவும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் மலரச் செய்தாய்.. நான் உன்னுடன் வளர்ந்தேன்.. நாங்கள் உன்னை மிகவும் மிஸ் செய்வோம்.. நீ நன்றாக வாழ்ந்தாய். நீங்கள் கஷ்டப்படாமல் இருந்ததில் மகிழ்ச்சி. உன்னுடைய ஆன்மா சாந்தியடையட்டும் போஷி. எங்கிருந்தாலும் நீ மகிழ்ச்சியாக இரு" என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "2023-ல் இன்னும்".. விலையுயர்ந்த Harley Davidson பைக்கில் நடிகை கனிகா.. அவரே பகிர்ந்த ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Actresses Rakul Preet singh Emotional Post after her dog demise

People looking for online information on Dog demise, Rakul Preet Singh will find this news story useful.