இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மது நடித்த படம் ரோஜா. விருதுகளை அள்ளி குவித்த இந்தப் படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை மது இல்லையாம்.
ஆம் முதலில் ரோஜா படத்தில் நடிக்க இயக்குனர் மணிரத்னம் கேட்டது 'அபியும் நானும்' பட புகழ் ஐஸ்வர்யாவை தானாம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் "நான் ரோஜா படத்தை பார்த்த பிறகு எனது தலைமுடியை பிடித்துக்கொண்டு, என்னை நானே பைத்தியம்.. பைத்தியம்.. பைத்தியம் என்று குறை சொல்லிக் கொண்டேன். அது உன்னிடம் வந்தது, நீயே உனது முட்டாள்தனம் காரணமாக இழந்துவிட்டாய். அப்பொழுது நான் ஒரு முட்டாள் தனமான படத்தில் ஒப்பந்தமாகி இருந்தேன். நான் மென்மையாக சாரி என்னால் இதை பண்ண முடியாது என்று சொல்லிவிட்டேன். எப்படி தேனை கொடுக்கும் பொழுது வேண்டாம் என்று சொல்கிறோமோ, அது போல" என்று கூறியுள்ளார். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் வாய்ப்புகள் ஒவ்வொன்றுமே முக்கியம் தான் போல..!