SHOOTING SPOT-ல் வைரமுத்துவுடன் ராஜா ராணி அர்ச்சனா... வைரல் ஆகும் புகைப்படங்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தவர் VJ அர்ச்சனா.

Actress VJ Archana met vairamuthu pics viral on social media
Advertising
>
Advertising

தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா, பின்னர் சீரியலில் நடிகையாகவும் வலம் வந்தார். வில்லி கதாபாத்திரம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த நிலையில், ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் கூட அர்ச்சனா கலந்து கொண்டிருந்தார்.

தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் கூட அதிக ஆக்டிவ் ஆக இருக்கும் அர்ச்சனா, அவ்வப்போது தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்தும் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் அதிகம் பகிர்வார். அதே போல, அர்ச்சனாவுக்கென பிரத்யேக ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அர்ச்சனா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகிறது. சமீபத்தில், ஷூட் ஒன்றில் நடிகை அர்ச்சனா கலந்து கொண்டதாக தெரிகிறது.

அந்த சமயத்தில், ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல பாடலாசிரியரான வைரமுத்துவை அர்ச்சனா சந்தித்துள்ளார். வைரமுத்துவை சந்தித்ததால் நெகிழ்ந்து போன அர்ச்சனா, அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஷூட்டிங்கிற்கு இடையே வைரமுத்துவை சந்திக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளியும் வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actress VJ Archana met vairamuthu pics viral on social media

People looking for online information on Vairamuthu, VJ Archana will find this news story useful.