''கோபமும், மன அழுத்தமும் உண்டாச்சு...'' - எடை குறைத்ததன் பின்னணி சொன்ன நடிகை வித்யூ ராமன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்த 'நீதானே என் பொன்வசந்தம்' படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் வித்யூ ராமன். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்குமொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் எடை குறைந்து ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்நிலையில் தற்போது பகிர்ந்து பதிவில்,  20 கிலோ குறைவாக இருக்கிறேன். இது கண்ணீரும், வேர்வையும் நிறைந்த சற்று நீளமான பயணம். முதலில் இருக்கும் புகைப்படம் என்னை ஆரரோக்கியமற்றவளாக காட்டியது. எனக்கு அந்த நாள் நன்றாக நியாபகம் இருக்கிறது.

ஒரு தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு செல்லும்போது என்னால் எந்த உடையையும் அணிய இயலவில்லை. மன அழுத்தமும் கோபமும் உண்டாகியது. அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நான் ஆரோக்கியமானவளாகவும், ஃபிட்டாக மாறவும் முடிவு செய்தேன். உங்களுக்காக நீங்கள் செய்யுங்கள் என்றார்.

நடிகை வித்யூ ராமனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் சூழ நிச்சயதார்த்தம்  நடைபெற்றது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தல் புகைப்படங்கள் பகிர, பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Actress Vidyulekha Raman gets emotional about her weightloss Journey | நடிகை வித்யூராமன் உடல் எடைகுறித்தது குறித்து எமோஷனல் பதிவு

People looking for online information on Vidyullekha Raman will find this news story useful.