உலக அளவில் ஹிட் அடித்த பாடலுக்கு.. புது லுக்கில் டான்ஸ் ஆடி அசத்திய வேதிகா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தி உள்ளிட்ட இந்தியாவில் முன்னணி மொழிகளில் விளம்பர படங்களில் நடித்து பின் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை வேதிகா.

Advertising
>
Advertising

Also Read | கேமரா மேனை பார்த்தாலே ROLEX கேங்ல ஒருத்தர் மாதிரி இருப்பாரு 🤣.. 'விக்ரம்' DOP பற்றி கமல் பேச்சு!   

இவர் தமிழில் அர்ஜூன் நடித்த 'மதராஸி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முக்கிய கவனிக்கத்தக்க நடிகையாக வலம் வருபவர்.

குறிப்பாக சரண் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார், பின் சிம்புவுக்கு ஜோடியாக காளை படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரது நடனம் குட்டிப்பிசாசு பாட்டில் இவரது நடனம் பரவலாக பாராட்டப்பட்டது.

அதன் பின் ஏ. ஆர் ரஹ்மான் இசையில் கலா பிரபு இயக்கத்தில் சக்கரக்கட்டி படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தார். பின் பரதேசி படத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

'பரதேசி' படத்தில் வேதிகாவின் நடிப்பிற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தன. பின் வசந்த பாலன் இயக்கத்தில்  காவியத்தலைவன் படத்தில் சித்தார்த், பிருதிவிராஜ் உடன் நடித்தார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இன்ஸ்டாகிராமில் 3.6 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்களை வைத்துள்ள வேதிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர்.

தற்போது படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரில் இருக்கும் வேதிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய லுக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மேகன் டிரைனரின் 'மேட் யூ லுக்' பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சில மணி நேரத்தில் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Also Read | வாரிசு படத்தின் அம்மா பாடல்.. ரிலீஸ் எப்போ? புதிய போஸ்டருடன் வெளியான அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Vedhika Dancing for Made You Look Meghan Trainor

People looking for online information on Made You Look, Meghan Trainor, Vedhika will find this news story useful.